Advertisment

“பா.ஜ.க அதை முயற்சி செய்திருப்பார்கள்” - பிரகாஷ் ராஜ்

prakash raj replied he joining bjp

Advertisment

பிரகாஷ் ராஜ் கடைசியாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது தனுஷின் ராயன், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா உள்ளிட்ட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

பிரகாஷ் ராஜ், நடிப்பைத்தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக ஒருவர் பகிர்ந்த பதிவு வைரலானது. இந்த பதிவிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “அவர்கள் முயற்சி செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் என்னை வாங்கும் அளவுக்கு (சித்தாந்த ரீதியாக) அவர்கள் உயர்ந்தவர்கள்இல்லை என்பதை உணர்ந்திருப்பார்கள்” என கிண்டல் கலந்து குறிப்பிட்டுள்ளார்.

actor prakash raj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe