Advertisment

''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்!

scscs

Advertisment

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையே கரோனா காரணமாக தனது பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளம் கொடுத்து விடுமுறை அளித்த நடிகர் பிரகாஷ் ராஜ் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு உதவி செய்து வந்தார்.

மேலும் வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைத் தன்னுடைய பண்ணை வீட்டில் தங்க வைத்ததுக்கொண்ட பிரகாஷ் ராஜ் அவர்களை அவ்வப்போது சொந்த ஊருக்கு அனுப்பிவைத்து வரும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தற்போது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''புலம்பெயர்ந்தோர் சாலையில் தவிக்கின்றனர்.. நான் இன்னும் என் உதவிகளை முடிக்கவில்லை. தினமும் நூற்றுக்கணக்கானவர்களுடன் தொடர்ந்து களத்தில் நிற்கிறேன். உங்களிடம் கேட்கிறேன்,முடிந்தவரை உங்களுக்கு நெருக்கமான ஒரு புலம்பெயர் தொழிலாளிஅவரின் சொந்த ஊரடைய ஒரு வழியைக் கண்டறியுங்கள். மீண்டும் அவரகளுக்கு உயிர் கொடுப்போம்.. இது ஒரு பிரகாஷ்ராஜ் அறக்கட்டளை முயற்சி'' எனப் பதிவிட்டுள்ளார்.

actor prakash raj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe