Published on 26/03/2020 | Edited on 26/03/2020
கரோனா வைரஸ் தொற்று உலகையே நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகமே முடங்கிப்போய் இருக்கும் நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தன் ஊழியர்களுக்கு மே மாதம் வரை முன்கூட்டியே ஊதியம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது....

''என் சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை, பண்ணை வீடு, மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை முன்கூட்டியே வழங்கி விட்டேன். கட்டுப்பாடு காரணமாக நின்று போயிருக்கும் எனது மூன்று படங்களிலும், சம்பந்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்குக் குறைந்தது அரை சம்பளத்தைத் தர அவசியமான வழிமுறையை மேற்கொண்டுள்ளேன். ஆயினும் இன்னும் முடியவில்லை. என்னால் முடிந்த வரை இன்னும் செய்வேன்'' என கூறியுள்ளார்.