prakash raj about modi latest

Advertisment

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் பிரகாஷ் ராஜ், நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி குறித்து பிரகாஷ் ராஜ் பேசியிருக்கும் வீடியோ பலராலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த நேர்காணலில் பிரகாஷ் ராஜிடம், “நீங்களும், நடிகர் கமல்ஹாசனும் மிகச்சிறந்த நடிகர்களாக இருந்தும் அரசியலில் தோற்று இருக்கிறீர்கள். அப்படியென்றால் உங்களை விட சிறந்த நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்களா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், “மோடி இருக்கிறார். அவர் சிறந்த நடிகர், மிகச்சிறந்த பெர்ஃபார்மர், மிகச்சிறந்த பேச்சாளர், காஸ்ட்யூம் டிபார்ட்மென்ட், ஹேர்ஸ்டைல் டிபார்ட்மென்ட் என எல்லாவற்றையும் அவர் வைத்திருக்கிறார்” என்றுள்ளார்.