"எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி தலைவா" -பிரகாஷ் ராஜ் வேதனை!

xzvX

தெலுங்கின் முன்னணி காமெடியனாகவும், வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. இவர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்தில் ரெட்டி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அஜித்தின் ஆஞ்சநேயா மற்றும் தனுஷின் உத்தமபுத்திரன் படங்கள் மூலம் தமிழில் பிரபலமடைந்த நடிகர் ஜெயபிரகாஷ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். 73 வயதான இவர் மேடை நாடகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பணிபுரிந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஜெயபிரகாஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

"சக நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டியின் திடீர் மரணம் என்னை ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிப்பு அவரது வாழ்க்கை. அவர் வெள்ளித்திரையிலும் மேடை நாடகங்களிலும் நடித்த பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த நடிகர். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி தலைவா. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்" என கூறியுள்ளார்.

actor prakash raj prakash raj
இதையும் படியுங்கள்
Subscribe