“உழைப்பு ரசிக்கப்படுவதில் மகிழ்ச்சி” - பிரகாஷ் ராஜ்! 

prakash raj about dhanush raayan success

தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் படம் நேற்று (26.07.2024) பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தை தனுஷ், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோஹிணி திரையரங்கிற்கு சென்று முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து படக்குழுவினர் ஒன்றாக இணைந்து அதை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக அப்படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் அதில் “ராயன் படக்குழுவின் உழைப்பு ரசிக்கப்படுவதில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைகிறேன். ரசிகர்களுக்கு நன்றி. மேலும் இது நடக்க காரணமான இயக்குநர் தனுஷுக்கும் நன்றி, தொடர்ந்து மகிழ்வியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

actor dhanush actor prakash raj Raayan
இதையும் படியுங்கள்
Subscribe