Skip to main content

“ப்ளூ ஜே.பி...” - சட்டப் பேரவையில் ஆபாசப் படம் பார்த்த பா.ஜ.க எம்எல்ஏ குறித்து பிரபல நடிகர்

 

prakash raj about BJP MLA Jadab Lal Nath watching obscene reels in  Tripura assembly session

 

திரிபுரா மாநில சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது கூட்டத்தின் நடுவே பாக்பாசா தொகுதி பா.ஜ.கவை சேர்ந்த எம்.எல்.ஏ ஜாதப் லால் நாத் தனது டேப்லெட்டில் ஆபாசப் படம் பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஜதாப் லால் நாத், 2018ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சட்டப்பேரவையில் ஒரு எம்.எல்.ஏ ஆபாசப்படம் பார்த்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் அரசியல் விமர்சகருமான பிரகாஷ் ராஜ், பா.ஜ.க எம்.எல்.ஏ ஆபாசப் படம் பார்த்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "ப்ளூ ஜே.பி... அசிங்கம்" எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் ஆபாசப் படம் பார்த்து சிக்கியுள்ளனர்.