கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குபின் சினிமா பிரபலங்கள் பலரும் உதவி செய்து வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தன் பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரையிலான சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து, அவர்களுக்கு விடுமுறை அளித்தார்.

prakash raj

Advertisment

மேலும் தனது பிறந்த நாளன்று வீடின்றி தவித்துக் கொண்டிருந்த கூலிப் பணியாளர்களுக்குத் தங்க இடம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பணம்உதவியும் செய்தார். இதையடுத்து அவருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படவே, தனது அறக்கட்டளை மூலம் நலிவடைந்த குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருவதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் மீண்டும் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவியுள்ளார் பிரகாஷ் ராஜ். அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.