pradeep ranganathan in love today movie Saachitale Promo released. music by yuvan shankar raja

தமிழ் சினிமாவில் 150 படங்களுக்கு மேல் இசையமைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யுவன் ஷங்கர் ராஜா. திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகளைக் கடந்த யுவன் தற்போது 'நானே வருவேன்', 'விருமன்', 'லத்தி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனிடையே 'கோமாளி' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்திற்கும்இசையமைத்து வருகிறார். 'லவ் டுடே' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Advertisment

இந்நிலையில் 'லவ் டுடே' படத்தின் 'சாச்சிட்டாலே' பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்தப் ப்ரோமோவில் பிரதீப் ரங்கநாதன் பழைய யுவன் வேணும் சார் என்று யுவனிடம் கேட்க, தன்னுடைய பழைய புகைப்படத்தை கொடுக்கிறார் யுவன். பின்பு இயக்குநரிடம், "பழைய யுவனோ, புது யுவனோ கிடையாது. அந்த யுவனும் இந்த யுவனும் ஒன்னுதான்" எனக் கூலாக சொல்கிறார். இந்தப் ப்ரோமோ திரைத்துறையில் 25 ஆண்டு கொண்டாடும் யுவனுக்கு வாழ்த்து கூறுவது போல வெளியாகியுள்ளது. மேலும் 'சாச்சிட்டாலே' பாடல் வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment