pradeep ranganathan ashwath marimuthu thanked tamil peoples regards dragon movie success

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் நேற்று(21.02.2025) தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படக்குழு சென்னையில் உள்ள திரையரங்குகளில் தியேட்டர் விசிட் அடிக்க தொடங்கியுள்ளது. அது தொடர்பான வீடியோவை படக்குழுவினர் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து இருவரும் தங்களது சமூக வலைதள்ப்பக்கத்தில் மக்களுக்கு நன்றி கூறி வருகின்றனர். பிரதீப் ரங்கநாதன், தனது என்ஸ் பக்கத்தில் “நன்றி தமிழ் மக்களே” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் “நீங்கள் முயற்சி செய்தால், அது நிச்சயமாக நடக்கும்” எனத் தெலுங்கில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அஷ்வத் மாரிமுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “உண்மையா உழைச்சா என்ன ஆனாலும் கூட நிப்போம்னு மறுபடியும் உணர வெச்ச தமிழ் மக்களுக்கு இந்த வெற்றியை மனசார சமர்ப்பிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.