/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_38.jpg)
பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் (61) மாரடைப்பால் காலமானார்.கடந்த 2021 ஆம் ஆண்டு 'ஈ நாடு இன்னலே வரே' படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான கோட்டயம் பிரதீப், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், பிரித்விராஜ், நிவின் பாலி துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். காமெடி நடிகரானஇவர் தமிழில் 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'தெறி', நண்பேன்டா', 'ராஜா ராணி', உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் இன்று(17.2.2022) காலை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின்மறைவு மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இவரதுமறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)