/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/36_87.jpg)
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் இன்று(21.02.2025) வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து மீண்டும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் 2027 தொடங்கப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் தெரிவித்தனர்.
அஷ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்புவின் 51வது படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனதுக்காக இயக்கவுள்ள நிலையில் இப்படத்தை அடுத்து பிரதீப் படம் தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)