/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/70_50.jpg)
அருவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பிரதீப் ஆண்டனி. அடுத்ததாக வாழ் படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும் டாடா படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். பிக் பாஸ் தமிழ் 7வது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் பூஜா சக்தி என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த ஜூனில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று(07.11.2024) பிரதீப் - பூஜா சக்தி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் இவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து புது தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)