ADVERTISEMENT

மதம் சார்ந்த விவகாரம்; மன்னிப்பு கேட்ட பிரபு சாலமன்

08:29 PM Dec 29, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரபுசாலமன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'செம்பி'. இதில் அஷ்வின் குமார், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாளை (30.12.2022) வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புக் காட்சி இன்று நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரபு சாலமன்.

அப்போது படத்தின் இறுதிக் காட்சியில், “உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிரானிடத்திலும் அன்பு கூறுவாயாக இயேசு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்தவ மதத்தைத் திணிப்பதுபோல உள்ளது எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த பிரபு சாலமன், "அப்படி எந்த நோக்கத்திலும் நான் சொல்லவில்லை. சிறு வயதிலிருந்தே நான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன். அதில் பழக்கப்பட்டவன்." என்றார். குறுக்கிட்ட செய்தியாளர்கள், “படம் எடுத்தது நீங்கள். இயக்கம் பிரபு சாலமன் என்று குறிப்பிட்டிருக்கலாமே” என்றனர்.

இதற்குப் பதிலளித்த பிரபு சாலமன், "கிறிஸ்தவம் என்பது ஒரு மதமும் கிடையாது. மதத்தைப் பரப்ப இயேசுவும் வரக் கிடையாது. அன்பு மட்டும்தான் எங்களுடைய நோக்கம். அதைத்தான் சொல்லியிருக்கோம்" என்றார். பின்பு செய்தியாளர்களுக்கும் பிரபுசாலமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு பிரபு சாலமன், "உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT