/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/croppedImg_735259606.jpeg)
நடன புயல் பிரபுதேவா அடுத்ததாக ஹிந்தி படம் ஒன்றை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஹிந்தியில் வான்டட், ரவுடி ராதோர், ராமையா வஸ்தாவய்யா, ஆர் ராஜ்குமார், ஆக்சன் ஜாக்சன், சிங் ஐஸ் ப்லிங்க் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் வான்டட் படத்தில் நடிகர் சல்மான் கானை இயக்கியிருந்தார் பிரபுதேவா. இந்நிலையில் இவர் தற்போது ஹிந்தியில் மீண்டும் சல்மான் கான் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பிரபுதேவா பேசுகையில்...."சல்மான்கானுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு பிடிக்கும். முதலில் நாங்கள் வேலை பார்த்த போது அவ்வளவாக பேசியது இல்லை. பின்னர் பேசினோம், நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். திரை உலகில் சல்மான்கான் போல உண்மையாக இருப்பவர்களை பார்ப்பது அரிது. திரை உலகில் உள்ள பலரைப்போல அவர் உண்மையில் நடிக்க தெரியாதவர். சல்மான்கான் அன்பானவர். அவர் கடின உழைப்பாளி. அவர் பல விஷயத்தில் ரஜினி சார் போன்றவர். இருவருக்கும் தனி ஸ்டைல் உள்ளது. அது அனைவருக்கும் பிடிக்கும். சல்மான்கான் யாரையும் கவர வேண்டும் என்று முயற்சி செய்யமாட்டார். ஆனால் பார்ப்பவர்களுக்கு அவரைப்பிடித்து போகும். இப்போது அவரை வைத்து ‘தபாங்3’ பெரிய படம் இயக்குகிறேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)