Advertisment

பாகுபலி வில்லனுடன் காட்டுக்குள் குங்பூ சண்டை போட்ட பிரபுதேவா 

prabhudeva

Advertisment

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் படம் 'எங் மங் சங்'. பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மேலும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த் ராமதாஸ், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்த நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் அர்ஜுன் எம்.எஸ் பேசும்போது...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா பாகுபலி வில்லன் காலகேய பாஷை பேசும் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக 'எங் மங் சங்' இருக்கும்" என்றார்.

prabhudeva yang mung chang
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe