Advertisment

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் பாட்டுக்கு நடனமாடிய பிரபுதேவா 

prabhudeva

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

'சார்லி சாப்ளின்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'சார்லி சாப்ளின் 2' படத்தை அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது. முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். மீண்டும் நடிகர் பிரபு இப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தயாரிப்பாளர் டி.சிவா முக்கிய வேடமேற்க கெளரவ வேடத்தில் வைபவ் நடிக்கிறார். இந்நிலையில் இப்படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் கேட்டபோது....

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

"இது முதல் பாகம் மாதிரியே கலகலப்பான படம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி ஜோடி முதன் முறையாக சினிமாவில் பாடிய "சின்ன மச்சான் செவத்த மச்சான் சின்ன புள்ள செவத்த புள்ள" என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம், நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பாப்புலரான பாட்டை அவர்களை வைத்தே சினிமாவில் பாட வைத்தோம். அவர்கள் திரைக்காக முதன் முதலாக பாடியது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் காட்சியில் பிரபுதேவா நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப் பாடிய பாடல் காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப் பட்டது. சூப்பர் ஹிட் பாடலாக இது பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் இயக்குனர்ஷக்தி சிதம்பரம். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

prabhudeva charliechaplin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe