'தளபதி 66' படத்தில் பிரபு தேவா; வெளியான புதிய தகவல்

Prabhudeva  choreographe vijay thalapathy66 film

பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன்இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதைபோன்றுகுடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் 6 பாடல்கள் உள்ளதாகவும், அவற்றில் விஜய்யின் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் குத்து பாடல் ஒன்று உள்ளதாகவும்கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,'தளபதி 66' படத்தின் ஓப்பனிங் பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைக்க உள்ளதாககூறப்படுகிறது. இப்பாடலில் விஜயின் நடனத்திற்கு தீனி போடும் வகையில் பிரபு தேவாவின் நடன அமைப்பு இருக்கும் என சினிமா வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

actor vijay Prabhu Deva thalapathy 66
இதையும் படியுங்கள்
Subscribe