/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/21_37.jpg)
தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமான பிரபு தேவா தற்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மை டியர் பூதம்' குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பஹீரா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'பரதன் பிக்சர்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கணேசன் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் 'பஹீரா' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அதோடு சூப் பாய்ஸ்-களுக்கு இது தான் உண்மையான சுதந்திர தினம் என்றும் குறிப்பிட்டு சர்ப்ரைஸாக புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர் படக்குழு.
Follow Us