prabhu solomon next film update

தமிழ் சினிமாவில் மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரபுசாலமன். கடைசியாக இவர் இயக்கத்தில் 'செம்பி' படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இந்த நிலையில் பிரபு சாலமன் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. படத்திற்கு மம்போ எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய்ஸ்ரீ ஹரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் இப்படத்தை தயாரிக்கும் நிலையில் டி.இமான் இசையமைக்கிறார். .

prabhu solomon next film update

Advertisment

இப்படம் ஒரு சிறுவனுக்கும் சிங்கத்திற்கும், இடையேயான உறவை விவரிக்கும் விதமாக உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக உண்மையான சிங்கத்தை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். சிங்கத்தை வைத்து எடுக்கப்படும் முதல் ஆசிய திரைப்படமாக இபப்டம் உருவாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதற்கேற்றாற் போல், விஜய்ஸ்ரீ ஹரி சிங்கத்துடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு முன்பாக யானை, வைத்து கும்கி படம் இயக்கியிருந்தார் பிரபு சாலமன். அப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு விலங்கை வைத்து எடுக்கவுள்ளார். இதனால் மம்போ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.