Advertisment

பிரபு சாலமன், அஷ்வின் படத்தின் ட்ரைலர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Prabhu Salomon,  Ashwin movie trailer update released

தமிழ் சினிமாவில் 'மைனா', 'கும்கி', 'கயல்' உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரபுசாலமன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'காடன்' படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், தற்போது 'செம்பி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அஷ்வின் குமார், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'டிரைடெண்ட் ஆர்ட்ஸ்' மற்றும் 'ஏஆர் எண்டர்டெயின்மெண்ட்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ்.கே பிரசன்னா இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இந்நிலையில், 'செம்பி' படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஜூன் 3-ஆம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Ashwin kumar kovai sarala prabhu solomon sembi movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe