
‘கொக்கி’, ‘லாடம்’, ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’, ‘தொடரி’ உள்ளிட்டவெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய், ஜோஜோஇந்தியன் ஃபிலிம் கார்பரேஷன் சார்பாக சி.வி. விக்ரம் சூர்யவர்மா தயாரிப்பில், விருதுபெற்ற குறும்படங்களை இயக்கிய இயக்குறர் கௌஷிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் ‘டேய் தகப்பா’எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜான் ராபின்ஸ் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (7/7/21) துவங்கியது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)