Skip to main content

"சிவாஜியின் உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு போலியானது" - நடிகர் பிரபு

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

prabhu said allegation that Shivaji will was forged bogus

 

60களில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். இவருக்கு  ராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர். ஏராளமான படங்களில் நடித்த சிவாஜி கணேசன் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார். அவரின் மறைவுக்கு பிறகு அவர்களது வாரிசுகளான ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி ஆகியோர் அனுபவித்து வருகின்றனர். 

 

இதனிடையே தந்தையின் சொத்தில் தங்களுக்கு பங்கு தராமல் பிரபுவும், ராம் குமாரும் ஏமாற்றிவிட்டதாக கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், "எங்களுடைய தந்தை சம்பாதித்த சொத்து தொடர்பாக எந்த ஒரு உயிலும் எழுதி வைக்காத நிலையில், ராம்குமார், பிரபு ஆகியோர் ஜோடிக்கப்பட்ட பொய்யான உயிலைக் காட்டி ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் சேர்த்து வைத்த 1000 சவரன் தங்க நகைகள், வைரம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றையும் எங்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டனர்.  மேலும் எங்களுக்கு தெரியாமல் பல சொத்துக்களை விற்று விட்டனர். இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப் பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (19.7.2022) விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கணேசன் எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்று கூறும் குற்றச்சாட்டுகள் தவறானது என்று நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரர் தரப்பிலிருந்து வாதிடப்பட்டது. இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கை ஜூலை 21 ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்