/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/102_9.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்துவருகிறார். தற்காலிகமாக ‘விஷால் 32’ எனபெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது சென்னையில் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், நடிகர் பிரபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக, ‘தாமிரபரணி’, ‘ஆம்பள’ ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து பிரபு நடித்திருந்த நிலையில், இப்படம் விஷாலுடன் அவர் இணையும் மூன்றாவது திரைப்படமாகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)