theal movie release date announced

Advertisment

இயக்குநர் ஏ.சி. முகில் இயக்கும் 'பொன் மாணிக்கவேல்' படத்தில் பிரபு தேவா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். சுரேஷ் சந்திர மேனன், பிரபாகர், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபு தேவாவின் 50வது படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை (19.11.2021) ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதனிடையேநடிகர் பிரபு தேவா, இயக்குநர்ஹரிகுமார் இயக்கியுள்ள ‘தேள்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தாஹெக்டே நடித்துள்ளார்.ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்துள்ளார். பிரபு தேவாவிற்கு அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார்.இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று (17.11.2021) சென்னையில் நடைபெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="43d8df12-f78b-40a9-a6ea-6b9d8645acf8" height="313" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_42.jpg" width="522" />

Advertisment

இந்நிலையில், ‘தேள்’ படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தேள்’ திரைப்படம் வரும் டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் ஹரிகுமார், ‘தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.