/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pon_16.jpg)
இயக்குநர் ஏ.சி. முகில் இயக்கும் 'பொன் மாணிக்கவேல்' படத்தில் பிரபு தேவா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். சுரேஷ் சந்திர மேனன், பிரபாகர், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபு தேவாவின் 50வது படமாக உருவாகும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்மற்றும் ட்ரைலர்வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அட்டகாசமான ட்ரைலருடன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதில், "பொன் மாணிக்கவேல் திரைப்படம் வரும் நவம்பர் 19ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)