/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-6_4.jpg)
தமிழகத்தில் நடன இயக்கத்திற்காக இரண்டு முறை தேசிய விருது வாங்கியவர் பிரபு தேவா.இந்திய முழுவதும் இவரது நடனத்திற்கு ரசிகர்கள் உண்டு. நடன இயக்குனர் மட்டுமின்றி நடிப்பு, இயக்கம், தயாரிப்பு உள்ளிட்ட துறைகளிலும் பணியாற்றிருக்கிறார். இந்தியில் முன்னணி நடிகரான சல்மான் கானை வைத்து இரண்டு படங்கள் ஹிட் கொடுத்துள்ளார். தமிழில் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவி படத்தில் ஒரு பாட்டிற்கு நடன இயக்குநராக பணியாற்றவுள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'லூசிபர்' படம் தெலுங்கில் ரீமேக் ஆகிவருகிறது. கதாநாயனாக சிரஞ்சீவி நடிக்க கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் சல்மான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். என்.வி பிரசாத் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் இணைந்து நடிக்கும் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டு முன்னணி ஹீரோக்களை வைத்து நடனம் இயக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)