/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/prabhu-deva_0.jpg)
சினிமா துறையில் நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முகத் திறமைகொண்ட பிரபு தேவா, தமிழில் ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபு தேவா அடுத்ததாக இயக்குநர்என் ராகவன் இயக்கும் மை டியர் பூதம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் படத்தின் 'மாஸ்டர் ஓ மை மாஸ்டர்...' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. யுகபாரதி வரிகளில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் வெளியாகியுள்ள இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே வெளியான படத்தின் மோஷன் போஸ்டரில்நடிகர் பிரபு தேவா 90ஸ் கிட்ஸ்களின்ஆதர்ச நாயகனானமைடியர்பூதம் கெட்டப்பில் தோன்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)