Advertisment

பிரபுதேவா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

prabhu deva starring musasi first look out now

Advertisment

சினிமா துறையில் நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முகத் திறமைகொண்ட பிரபு தேவா, தமிழில் ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை', ’மை டியர் பூதம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். இவரதுநடிப்பில் கடைசியாக வெளியான தேள் படம் கலவையான விமர்சனங்களையேபெற்றது.

இந்நிலையில் நடிகர் பிரபு தேவாஅடுத்தாக இயக்குநர்சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருடன் மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடிக்கவுள்ளார். 'முசாசி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜாய் பிலிம்ஸ் பாக்ஸ் என்டர்டைமென்ட் நிறுவனத்தின் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறது. வி.டி வி கணேஷ் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அதில் பிரபு தேவா கையில் கம்பியுடன் மாஸாக நடந்துவரும்இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

lokesh kanagaraj Prabhu Deva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe