Advertisment

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ படத்தின் பூஜை!

Prabhu Deva starrer 'Singanallur Signal' movie Pooja!

முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர் AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், என்டர்டெயினராக உருவாகும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாகத் துவங்கியது.

Advertisment

ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் JM ராஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, , துருதுருபிரபுதேவா மாஸ்டரை இப்படத்தில் காணலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்ரீமன், ஷைன் டாம் சாக்கோ, ஹரீஷ் பேரடி, ஹரிசங்கர், நிகில் தாமஸ், அயாஸ் கான், பிரதோஷ் ஜெனிஃபர், சித்ரா லட்சுமணன், ஸ்ரீ ரஞ்சினி, அஜய் கோஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, PL தேனப்பன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். பிரபுதேவா நடிப்பில் வெளியான “மனதை திருடிவிட்டாய்” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தற்போது 23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா - யுவன் சங்கர் ராஜா கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து இருக்கிறது.

Advertisment

இந்நிகழ்வினில் நடிகர் பிரபுதேவா பேசியதாவது, “இங்கு நீண்ட காலம் கழித்து உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. இங்குள்ள பலரை எனக்கு பர்ஸனலாகத் தெரியும், எல்லோருடனும் படம் செய்துள்ளேன், ஸ்ரீமன் பல வருடமாக என் ஃபிரண்ட், அவருடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் பற்றி எல்லோரும் சொன்னார்கள், இந்தக் கம்பெனியில் நாலைந்து படம் செய்தால் நன்றாக இருக்கும் என வேண்டிக்கொண்டேன். மிக கச்சிதமாகத் திட்டமிடுகிறார்கள். மிக நல்ல தயாரிப்பு நிறுவனம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி” எனப் பேசினார்.

Pooja Prabhu Deva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe