/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/prabhu-deva.jpg)
சினிமா துறையில் நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முகத் திறமைகொண்ட பிரபு தேவா, தமிழில் ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனிடையே, இந்தியில் ‘வான்டட்’, ‘ரௌடிரத்தோர்’, ‘ராதே’ உள்ளிட்ட படங்களை நடிகர் பிரபு தேவா இயக்கியுள்ளார்.
இந்நிலையில்நடிகர் பிரபு தேவா, இயக்குநர்ஆஷிஷ் குமார் துபே இயக்கும் இந்தி படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் நடிகர் பிரபு தேவா இந்தியில் கதாநாயகனாகஅறிமுகமாகவுள்ளார். 'ஜர்னி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அஞ்ஸூம்ரவி மற்றும் அஸீஸ் துபேஇருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.முதற்கட்ட பணிகளை விறுவிறுப்பாக நடத்திவரும் படக்குழு, படப்பிடிப்பை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தவுள்ளது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துவருவதால் விரைவில் அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர்ஹரிகுமார் இயக்கத்தில்நடிகர் பிரபு தேவா நடித்துள்ள 'தேள்' திரைப்படம், வரும் டிசம்பர் 10ஆம்தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)