prabhu deva joins vadivelu starring naai sekar returns film

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர்சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான 'தலைநகரம்' படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரமும், அவர் பேசும் நகைச்சுவை வசனங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் சுராஜ் நடிகர் வடிவேலுவை வைத்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ரெடின்கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி ஆனந்தராஜ்உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவா இப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கிறார். இதற்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. பொதுவாக பிரபு தேவா அமைக்கும் பாடல்கள் பெரும் கவனம் பெரும்நிலையில் தற்போது இந்த பாடலின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. வில்லு படத்தை தொடர்ந்து 14 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி இப்படத்தில் இனைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில்'நாய் சேகர் ரிட்டன்ஸ்'படத்தின் இசை, மற்றும் ட்ரைலர் குறித்தஅறிவிப்பு வெளியாகும் என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment