பிரபுதேவாவின் ஃப்ளாஷ்பேக்கில் ரெஜினா - வெளியான ஃபர்ஸ்ட்லுக்

prabhu deva flashback movie first look poster released

சினிமா துறையில் நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முகத் திறமைகொண்ட பிரபு தேவா, தமிழில் ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையடுத்து நடிகர் பிரபு தேவா டான்சாண்டி எழுதி இயக்கும் 'ஃப்ளாஸ்பேக்' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அனுஷ்யா பரத்வாஜ் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="602ea19e-41c7-477a-a928-2ffa37492245" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_52.jpg" />

இந்நிலையில் ஃப்ளாஸ்பேக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைபடக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், சைக்களில்செல்லும் ரெஜினாவை நின்று கொண்டு பார்க்கும்வகையில் நடிகர் பிரபு தேவா கோட்டு சூட்டுடன் ஸ்டைலாக தோன்றியுள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

Prabhu Deva Regina Cassendra
இதையும் படியுங்கள்
Subscribe