
பிரபு தேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் படம் ‘மூன்வாக்’. இப்படத்தை மனோஜ் என்.எஸ். இயக்குகிறார். மேலும் திவ்யா மனோஜ், பிரவீன் இலக் உள்ளிட்டோருடன் இணைந்து பிஹைண்ட்வுட்ஸ் பேனரில் தயாரிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, அஜுவர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு இசையமைக்கிறார்.
பான் இந்திய ரீதியில் வெளியாகும் இந்தப் படம் தற்போது படப்பிடிப்பும், எடிட்டிங்கும் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிறுவனம் விஜய் நடித்த கோட் மற்றும் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.