Advertisment

இயக்குநர் மிஷ்கின் தொடங்கி வைத்த ‘ரேக்ளா’

Prabhu Deva and vani bhojan new film starts shooting

சினிமா துறையில் நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முகத் திறமைகொண்ட பிரபு தேவா, தமிழில் ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை', ’மை டியர் பூதம்’, 'முசாசி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.இதனைத்தொடர்ந்துவால்டர் பட இயக்குநர் அன்பு இயக்கத்தில் ரேக்ளா என்ற படத்தில் பிரபு தேவா நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கவுள்ளார். ஒலிம்பிய மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.

Advertisment

பிரபு தேவாவின் 58 வது படமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார் கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் மிஷ்கின்க்ளாப்அடித்து தொடங்கி வைத்தார்.

Advertisment

vani bhojan mysskin Prabhu Deva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe