Advertisment

'பொன் மகள் வந்தால்...' - பிரபு தேவா நெகிழ்ச்சி

prabhu deva about his child

Advertisment

'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' என ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபு தேவாநடிப்பு, இயக்கம், தயாரிப்பு எனப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'பஹீரா' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

கடந்த 1995 ஆம் ஆண்டு ரம்லத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்த நிலையில் மூத்த மகன் புற்று நோயால் 2008 ஆம் ஆண்டு இறந்தார். பின்பு ரம்லத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இதையடுத்து மும்பையில் வசித்து வந்த பிரபு தேவா அங்குள்ள பிசியோதெரபி மருத்துவர் ஹிமானி சிங்குடன் காதல் ஏற்பட்டு அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகத்தகவல்கள் வெளியாயின. இருவரும் சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு வருகை தந்த நிலையில் அந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகின.

சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் பெண் குழந்தை பிறந்ததாகத்தகவல் வெளியானது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார் பிரபுதேவா. இதனை ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரபு தேவா, "எனக்கு குழந்தை பிறந்துள்ளது உண்மைதான். 50 வயதில் நான் மீண்டும் தந்தையாகியுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனது பணிச் சுமையை ஏற்கனவே குறைத்துவிட்டேன். எனது துறையில் அதிக வேலையை செய்து முடித்துள்ளதாக நினைக்கிறேன். அதனால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன்" என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Prabhu Deva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe