prabhas adipurush

பிரம்மாண்ட பொருட்செலவில் பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் படம், 'ஆதிபுருஷ்'. தற்போதுபிரபாஸ், 'ராதே ஷ்யாம்' என்னும் காதல் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

இந்தப் படம் முடிந்த பின்னர், மற்றொரு பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நாக் அஷ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் முடிந்த பிறகே ஆதிபுருஷ் படத்தில் நடிக்கிறார் பிரபாஸ்.

Advertisment

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும், 'ஆதி புருஷ்' படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. சயிஃப் அலிகான் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் தங்களுடைய வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11ஆம் தேதி, இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

Advertisment

இப்படத்தில், ராமராக பிரபாஸும், ராவணனாக சயிஃப் அலிகானும் நடிக்கவுள்ளனர். இதில் நாயகியாக நடிக்க முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டு வருடம் கழித்து வெளியாகப்போகும் இப்படத்தின் முன்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.