Skip to main content
Sangathamizhan-Desktop Sangathamizhan-mobile

பாலிவுட் முதல் கோலிவுட் வரை... பிரபாஸின் ‘சாஹோ’ டீஸர் சாதனை...

பாகுபலி 2 வை தொடர்ந்து பிரபாஸ் சாஹோ என்னும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் ஷூட்டிங் பெரும் பொருட்செலவில் நடைபெற்று வருகிறது. பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். தமிழ் நடிகர் அருண் விஜய்தான் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
 

sahoo

 

 

தெலுங்கு திரைப்படதுறையில் இளம் இயக்குனர் சூஜீத், சாஹோ படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை யூவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 

நேற்று வெளியான இப்படத்தின் டீஸர், இந்தியா முழுவதும் பல சாதனைகளை படைத்து வருகிறது. ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் டீஸரும் இத்தனை மொழிகளில் நேற்று வெளியானது.  டீஸர் வெளியாகி 12மணி நேரத்தில் அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 41 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர் (40 மில்லியன் என்பது 4 கோடி). இந்த 41 பார்வையாளர்கள் என்பது யூ-ட்யூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூகவலைதளங்களையும் சேரும். இதற்கு முன்பு ஷாரூக் கானின் ஜீரோ படத்தின் டீஸரை 24 மணி நேரத்தில் 40 மில்லியன் பேர் பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

மிஸ் பண்ணிடாதீங்க