Advertisment

நடிப்பிற்கு சின்ன பிரேக் விடும் பிரபாஸ்

Prabhas take a short break from cinema

Advertisment

பிரபாஸ், சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் படத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனமே பெற்ற இப்படம், உலகளவில் ரூ. 600 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் தி ராஜா சாப், சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட், இந்தியில் நாக் அஷ்வின் இயக்கும் கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

இப்படி வரிசையாகப் படங்களை கமிட் செய்துள்ள பிரபாஸ் தற்போது நடிப்பிலிருந்து சிறிய பிரேக் எடுக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலையை பாதுகாப்பதற்காக ஒரு மாதம் ஓய்வெடுத்து, அடுத்த மாதமான மார்ச்சில் மீண்டும் நடிப்புக்கு திரும்ப பிரபாஸ் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சலார் படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றதால், அடுத்துஎவ்வாறு முன்னோக்கி செல்லலாம் என திட்டம் தீட்டவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

prabhas
இதையும் படியுங்கள்
Subscribe