/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/104_10.jpg)
‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகிவரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒருபகுதியை மையமாக வைத்து பிரம்மாண்ட படமாக உருவாகிவரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் எடுக்கப்படுகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார்.
இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான்ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)