Advertisment

"சிங்கம், சிறுத்தை, புலி..." - ராக்கி பாய் டச்சில் பிரபாஸின் ‘சலார்’

prabhas salaar teaser released

'கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, பிரித்விராஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 28ஆம் தேதி பான் இந்தியா படமாக தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை பார்க்கையில் கே.ஜி.எஃப் படத்தில் ஹீரோவுக்கு பில்டப் கொடுக்கும் கதாபாத்திரம் போல இதிலும் ஒரு கதாபாத்திரம் வருகிறது. அந்த கதாபாத்திரம், "சிங்கம், சிறுத்தை, புலி, யானை..மிகவும் ஆபத்தானது. ஆனால் ஜுராஸிக் பார்க்கில் அல்ல. ஏனென்றால் அந்த பார்க்கில்.." என்று சொல்ல பிரபாஸ் என்ட்ரி கொடுக்கிறார். இயக்குநரின் முந்தைய படங்களை போல் இந்த படத்திலும் ஆக்சஷன் காட்சிகள் அதிகம் நிறைந்திருக்கிறது போல் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

prabhas Prashanth Neel salaar
இதையும் படியுங்கள்
Subscribe