Advertisment

ஆண்டு இறுதியில் வரும் பிரபாஸின் சலார்

prabhas salaar new release date update

'கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம்பான் இந்தியா படமாகத்தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று (செப்டம்பர் 28) வெளியிடத்திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப் போவதாகச்சமீபத்தில் அறிவித்தது. மேலும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில்புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது.

salaar Prashanth Neel prabhas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe