prabhas

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான சென்ற அக்டோபர் 23ம் தேதி தனது பிரம்மாண்ட படமான 'சாஹூ' திரைபடத்தின் "Shades of Saaho" எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார். இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மேலும் ரசிகர்களுக்கு இது மிகப்பெரும் விருந்தாக அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் "சாஹூ" படம் மிகுந்த பொருட்செலவில் வளர்ந்து வருகிறது. இப்படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரதா கபூர் நடிக்க ஜாக்கி ஷிராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வம்சி, பிரமோத், விக்ரம் அவர்களின் யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/huw6wD_1ppE.jpg?itok=KV13cJsq","video_url":" Video (Responsive, autoplaying)."]}