prabhas

Advertisment

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும்பிரபாஸ் பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து, பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

பாகுபலிக்கு பின் பெரும் பொருட்செலவில் ஐந்து மொழிகளில் சாஹோ படத்தை ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது தயாரிப்பில் இருக்கும் 'ராதே ஷ்யாம்', 'ஆதிபுருஷ்' மற்றும் நாக் அஸ்வின் இயக்கவுள்ள படம் ஆகிய அனைத்து படங்களுமே தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் பாகுபலி படத்திலிருந்து கடந்த 8 வருடங்களாக பிரபாஸிற்கு உடற்பயிற்சி நிபுணராக இருக்கும் லட்சுமண் ரெட்டிக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார்.

Advertisment

தற்போது தன் நட்புக்குபரிசாக லட்சுமண் ரெட்டிக்கு விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் காரைப் பரிசாக அளித்திருக்கிறார் பிரபாஸ். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.