8 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் பிரபாஸின் அடுத்த படம்!

prabhas 25

‘பாகுபலி’ படங்களுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் பிரபாஸிற்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதி புருஷ்’, ‘சலார்’ ஆகிய படங்களும் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களுக்குப் பிறகு அடுத்ததாக எந்தப் படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அப்படம் தன்னுடைய 25வது படம் என்பதால் படத்திற்கான கதையை தேர்வு செய்வதில் பிரபாஸும் மிகுந்த கவனம் செலுத்திவந்தார்.

இந்த நிலையில், பிரபாஸின் 25வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (07.10.2021) வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபாஸின் 25வது படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். ‘ஸ்பிரிட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஜாப்பனீஸ், சைனீஸ், கொரியன் என எட்டு மொழிகளில் உருவாகவுள்ளது.

prabhas
இதையும் படியுங்கள்
Subscribe