Skip to main content

டோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் செல்லும் 'பிரபாஸ்' : வெளியான புதிய தகவல்

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

'Prabhas' Going From Tollywood To Hollywood: New Information Released

 

'பாகுபலி' படத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமானார்  'பிரபாஸ்'. அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த 'சாஹோ' மற்றும் 'ராதே ஷ்யாம்' படங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல ஓப்பனிங் இருந்தது. பிரபாஸ் தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பின்பு 'கே.ஜி.எஃப் 2' படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்  'சலார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகி வருகிறது. அதன் பிறகு நாக் அஸ்வின் இயக்கும் 'ப்ராஜக்ட் கே' படத்தில் நடிக்கிறார்.

 

இந்நிலையில் பிரபாஸ் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல யுனிவர்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதிபுருஷ் ஓடிய திரையரங்கிற்கு வந்த குரங்கு; ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கமிட்டு ரசிகர்கள் ஆரவாரம்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

monkey in theatre adipurush movie

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 

 

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியான போது கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது.

 

இப்படம் திரையிடும் திரையரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப் போவதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இப்படத்துக்கு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், தெலுங்கானாவில் 10,000 டிக்கெட்கள் இலவசமாக வழங்கவுள்ளதாகவும் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் இந்தியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இப்படத்தை காண்பித்து உதவ 10, 000 டிக்கெட்டுகள் புக் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்கள். 

 

monkey in theatre adipurush movie

 

இந்நிலையில் இன்று திரையரங்கில் ஆதிபுருஷ் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கையில் திரையரங்கின் ஜன்னல் வழியே குரங்கு ஒன்று எட்டிப் பார்த்தது; தீவிரமான பக்தர்களால் ஆஞ்சநேயரே ஆதிபுருஷ் பார்க்க வந்துவிட்டார் என நினைத்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

'ராதே ஷ்யாம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

RadheShyam

 

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த மார்ச் மாதம் திரையில் வெளியான படம் 'ராதே ஷ்யாம்'. இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருந்தார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளிவந்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக முதல் நாளிலேயே 79 கோடி ரூபாய் வசூல் செய்தது.

 

இந்நிலையில்  'ராதே ஷ்யாம்' படம் ஏப்ரல்-1 அன்று ஓடிடியில் வெளியாகும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல்-1 அன்று தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளிலும் வெளியாகிறது. இதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து ஒரு புதிய ட்ரைலரையும் அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது.