'Prabhas' Going From Tollywood To Hollywood: New Information Released

Advertisment

'பாகுபலி' படத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமானார் 'பிரபாஸ்'. அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த 'சாஹோ' மற்றும் 'ராதே ஷ்யாம்' படங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல ஓப்பனிங் இருந்தது. பிரபாஸ் தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பின்பு 'கே.ஜி.எஃப் 2' படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகி வருகிறது. அதன் பிறகு நாக் அஸ்வின் இயக்கும் 'ப்ராஜக்ட் கே' படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் பிரபாஸ் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல யுனிவர்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.