கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே வருகிறது. அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளது. இதனிடையே பிரதமர் நிவாரண நிதிக்கு பிரபலங்கள் பலரும் நன்கொடை செலுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாகத் தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் அவர்கள் மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் பிரதமர் நிவாரண நிதிக்கும் நிதி அளித்துள்ளனர்.
இந்த பிரதமருக்கு அளித்த நிவாரண நிதியில் அதிகபடியாக பாகுபலி ஹீரோ பிரபாஸ் மூன்று கோடி நிதியை வழங்கியுள்ளார். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்கள் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் வழங்கியுள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு முதலில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் சார்பில்தான் ஒரு கோடி நிதி வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து தெலுங்கு திரைதுறை பிரபலங்கள் பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.