prabhas fan suicide letter to radhe shyam movie team

Advertisment

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. சமீபத்தில் வெளியான ‘ராதே ஷியாம்’ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பிரபாஸ் ரசிகர் ஒருவர் ‘ராதே ஷியாம்’ படத்தின் அப்டேட்டைவெளியிடக் கோரி தற்கொலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "சார் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதாத நான் முதல்முறையாக தற்கொலை கடிதம் எழுதுகிறேன். நீங்கள் ‘ராதே ஷியாம்’ படத்தின் அப்டேட்டைவெளியிடாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னுடைய மரணத்தைப் பார்த்த பிறகாவது படத்தின் அப்டேட்டைவெளியிடுவீர்கள் என நம்புகிறேன். நீண்ட நாட்களாக காத்திருந்தோம், இது போதும் சார்... என் மரணத்திற்கு காரணம் ‘ராதே ஷியாம்’ படத்தின் இயக்குநர்ராதா கிருஷ்ணகுமார் மற்றும் படக்குழுவினர்தான்" எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தக் கடிதம் இணையத்தில் வைரலாகிறது.

‘ராதே ஷியாம்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.