prabhas complete 22 years in film industry

தெலுங்கு மட்டுமல்லாது இந்திய அளவில் அறியப்படும் நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரது படங்கள் முதல் நாளில் நல்ல வசூல் பெற்று சாதனை படைத்துள்ளது. ஈஸ்வர் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபாஸ் நுழைந்து 22 ஆண்டுகள் கடந்துள்ளது. பாகுபலி, சாஹோ, மற்றும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சலார், கல்கி 2898 கிபி போன்ற படங்களால் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார்.

சலார் 2, ஸ்பிரிட், ஹனு ராகவ்புடியின் திரைப்படம், தி ராஜாசாப், கல்கி 2 மற்றும் ஹோம்பேலா பிலிம்ஸுடன் இரண்டு படங்கள் என நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பிரபாஸ். இந்த நிலையில் 22 ஆண்டுகளை கடந்த பிரபாஸிற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.